பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரிட்டிஷ் அரசியல் பெரும்புள்ளி ஜெரமி கோர்பினை சந்தித்து மலேசியா-பிரிட்டன் இடையிலான உறவுகள், முதலீடுகள், வாணிபம், பொருளாதாரம் ஆகியவை குறித்து கருத்து பரிமாற்றம் செய்துகொண்டனர்.
கோர்பின் தம்முடைய பழைய நண்பர் என்று குறிப்பிட்ட அன்வார், அண்மையில் அலுவல் பயணமாக ஜனவரி 15 முதல் 19 ஆம் தேதி வரை லண்டன் சென்றிருந்த போது அவரை சந்தித்ததாக சொன்னார்.
காஸா போர் நிறுத்தம் உட்பட நடப்பு உலக நாடுகள் விவகாரங்கள் குறித்தும் பேசியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தங்களுக்கிடையிலான இந்த நட்பு நீடித்து தொடர வேண்டும், அர்த்தம் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக தம்முடைய ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
கோர்பின் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.