அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய TikTok செயலி இன்று மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்க உள்ள நிலையில், அவர் TikTok செயலிக்கான தடையை நீக்குவதாக உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து, அது மீண்டும் சேவையை தொடங்கியதாக கூறப்படுகிறது.