வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாது!" – டிரம்பின் அதிர்ச்சி உத்தரவு
அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டோனல்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்துள்ளார். குறிப்பாக, அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் விதி ரத்து செய்யப்பட்டு, இப்போது ஊழியர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
பதவி ஏற்றவுடன், பழைய நிர்வாகத்தின் 80 நடவடிக்கைகளை அவர் ரத்து செய்யப்போவதாக தெரிவித்தார். "பைடனின் நிர்வாகம் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமானது," என அவர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டின் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பகுதி வீட்டு வேலை ஆற்றுவதாக கூறப்பட்டது, ஆனால் இந்த எண்ணிக்கை தவறானது என ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.