புதுடெல்லி: 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியக் காப்பி ஏற்றுமதி US$1.29 பில்லியனாக (ரூ.11,165 கோடி) எட்டியுள்ளது, இது 2020-21ஆம் ஆண்டின் US$719.42 மில்லியனுக்கு இரு மடங்கு உயர்வாகும். இந்தியா 9,300 டன்னுக்கும் அதிகமான காப்பி ஏற்றுமதி செய்துள்ளது. இத்தாலி, பெல்ஜியம், ரஷ்யா ஆகிய நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்களாக உள்ளன.
இந்தியக் காப்பியின் தனித்துவமான சுவைக்கான உலகளாவிய தேவை இந்த வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. காப்பி, உடனடி மற்றும் வறுத்த வகைகள் அதிகரித்துவரும் ஏற்றுமதியில் பங்கு வகிக்கின்றன.
உள்நாட்டிலும், 2012இல் 84,000 டன் இருந்த காப்பி நுகர்வு 2023இல் 91,000 டன் ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உற்பத்தி அதிகரிக்கிறது.
இந்தியக் காப்பி வாரியம், உற்பத்தி திறனை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தி, உலகளாவிய போட்டித் தன்மையை ஊக்குவிக்கின்றது.