Offline
மோதிய ஓட்டுநரை பழிவாங்கிய நாய்!
Published on 01/23/2025 02:52
News

சாகர் (இந்தியா): மத்தியப் பிரதேசத்தின் சாகர் நகரில், 17ஆம் தேதி ஒரு நாய், தனது மீது மோதிய காரின் ஓட்டுநரிடமிருந்து பழிவாங்கியது. பிரஹ்லாத் சிங் கோ‌ஷி குடும்பத்துடன் திரமண நிகழ்வு காணச் சென்றபோது, கார் தவறுதலாக நாயை மோதியது. சிறு விபத்தால் நாய்க்கு காயம் நேரவில்லை.

பின்பு, குரைத்துக்கொண்ட நாய் காரைத் துரத்தியது. பல மணிநேரம் கழித்து கோ‌ஷி குடும்பம் வீடு திரும்பியபோது, கண்காணிப்பு கேமராவில் அந்த நாயின் காரைத் தாக்கிய காணொளி பதிவானது. முதலில், கோ‌ஷி குடும்பம் சிறாரிடமிருந்து காருக்கு கீறல்கள் ஏற்பட்டதாக நினைத்தனர், ஆனால் பின்னர் அந்த நாயின் பழிவாங்கல் தெரியவந்தது.

Comments