திருப்பதி தேவஸ்தானம், 42 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. இதில், வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், பொறியல், சட்னி, சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகின்றன. தற்போது, பக்தர்களுக்கு மசால் வடை பிரசாதமாக வழங்க முடிவாகி, சோதனைக்காக 5,000 பக்தர்களுக்கு வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத மசால் வடை வழங்கப்பட்டது. பக்தர்கள் திருப்தியடைந்ததை தொடர்ந்து, பிப். 4 முதல் ரதசப்தமி தினத்தில் அனைத்து பக்தர்களுக்கும் மசால் வடை பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.