Offline
குடும்பத்துடன் கடற்கரையில் சுற்றுலா சென்ற பெண் மற்றும் மருமகள் மூழ்கி உயிரிழப்பு!
News
Published on 01/23/2025

கோத்தா திங்கி: குடும்பத்துடன் கடற்கரையில் சுற்றுலா சென்ற 33 வயது பெண்ணும், 13 வயது மருமகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) மாலை 5.30 மணியளவில் பாயு டமாயில் உள்ள பாயு இம்பியன் கடற்கரையில் இந்த சம்பவம் நடைபெற்றது. உறவினர்களுடன் கடற்கரையில் நீந்திய போது, பலத்த அலைகளால் பெண் மற்றும் நான்கு குழந்தைகள் சிக்கினர். உதவியுடன் மற்றோரு 60 வயது நபர் மீண்டும் கரைக்குத் திரும்பினார். மீட்புக் குழு, பொதுமக்களின் உதவியுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்டது. துரதிர்ஷ்டவசமாக, 33 வயது பெண் மற்றும் 13 வயது மருமகள் இறந்துவிட்டனர். மீட்பு பணியில் 15 தீயணைப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு கடற்கரைகளில் நீச்சல் செய்யத் தவிர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments