போர்ட்டிக்சன்: தெலோக் கெமாங்கில் உள்ள ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து இறந்ததை மறைத்ததாக சந்தேகிக்கப்படும் 18 மற்றும் 21 வயதுடைய தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று, 11.13 மணிக்கு போர்ட்டிக்சன் மருத்துவமனையிலிருந்து பிரசவித்த ஒரு சிறுமியின் குறித்து அவசர அழைப்பு வந்தது. பின், வீட்டில் ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்ட குழந்தை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் மார்பில் காயங்களும், அவை கூர்மையான பொருளால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. குற்ற வழக்கின் கீழ், தம்பதியினர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.