அஃப்லாக் ஸ்டார்ஸ் 15வது ஆண்டு விழா: சமூக நலத்தில் புதிய முயற்சிகள் அறிமுகம்"
அஃப்லாக் ஸ்டார்ஸ் கல்வி, கலாசார மன்றத்தின் 15வது ஆண்டு விழாவில், சமூக நலன் மற்றும் கல்வி, கலாசார முன்னேற்றத்தில் மேற்கொள்ளும் பணிகள் பாராட்டப்பட்டது.
சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை, மன்றத்தின் சேவைப் பயணம் மற்றும் புதிய திட்டங்கள் ‘அஃப்லாக் திருமணச் சேவை’ மற்றும் ‘அஃப்லாக் வலையொளி’ பற்றி பேசினார். சமூக தேவைகளைக் கையாள்வதில் இவை முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன், மேலும் பல புதிய முயற்சிகளில் அஃப்லாக் அங்கத்தினராக பங்கேற்க ஆர்வம் தெரிவித்தார். விழாவின் போது, மன்றத்தின் சாதனை பயணத்தை விவரிக்கும் காணொளி திரையிடப்பட்டது.