அங்காரா, துருக்கி:
துருக்கியின் வடமேலே உள்ள போலு மாகாணத்தில் அமைந்த ஓட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 238 பேர் தங்கியிருந்த ஓட்டலில் தீ பரவியபோது, 66 பேர் உயிரிழந்துவிட்டனர், 51 பேர் படுகாயமடைந்தனர். சில மணி நேரத்தில், சிகிச்சை பலனின்றி மற்றவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு, சம்பவத்திற்கு தொடர்புடையவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.