Offline
76ஆவது இந்திய குடியரசு தின கொண்டாட்டம்: கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
Published on 01/29/2025 01:11
News

76ஆவது இந்திய குடியரசு தின கொண்டாட்டம் நேற்று கோலம்பூரில் நடைபெற்றது. இந்தக் கொண்டாட்டத்தை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ,ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி,இந்தியாவுக்கான தூதர் பி.என் ரெட்டி உட்பட பல நாட்டுத் தூதர்கள், கல்விமான்கள், பெருளாதார வல்லுனர்கள் என நம் நாட்டிலுள்ள முக்கிய இந்திய பிரமுகர்கள் வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆடல், நடனம், இசை என இந்தியப் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு, மலேசியா பண்பாட்டு வகையிலும் மலாய் நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன. சிறப்பு அம்சமாக கண்பார்வையற்றோர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அறிவிப்புச் செய்ததோடு, பல மொழிகளில் பாடி வந்திருந்தவர்களை அசத்தினர்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவு நெடுநாள் பந்தம் ஆகும். மலேசிய இலக்கவியல் துறையில் அமைச்சர் கோபிந் சிங் அவர்கள் பல புதுமைகளையும் காலத்திற்கேற்ற மாற்றங்களையும் செய்து வருவதை மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என் ரெட்டி பாராட்டினார். அதோடு பெருளாதாரத் துறையிலும், சுற்றுலாதுறையிலும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தவேண்டும் என பி.என் ரெட்டி கேட்டுக் கொண்டார்.

Comments