Offline
உத்தரபிரதேசம்: திருவிழாவில் மேடை சரிந்து விழுந்து 7 பேர் பலி
Published on 01/29/2025 01:13
News

லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் படக்ட் மாவட்டத்தில் சமண (ஜெயின்) மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் ஆண்டுதோறும் லட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. பத்கர்கள் லட்டுகளை கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு லட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி மதவழிபாட்டு தலத்தில் மூழ்கில் கம்புகளால் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் 100க்கும் மேற்பட்டோர் ஏறி வழிபாடு நடத்த முற்பட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மேடை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்த.கவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments