Offline
கிள்ளான் எரிவாயு சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி மரணம்
Published on 01/29/2025 01:19
News

கிள்ளான்:

கிள்ளானின் தாமான் அமான் பெர்டானாவில் உள்ள ஒரு எரிவாயு சேமிப்புக் கிடங்கு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான மூன்று வெளிநாட்டுத் தொழிலாளர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கடந்த வாரம் முதல் பாதிக்கப்பட்ட இருவரும் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை மற்றும் ஷா ஆலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவரும் உயிரிழந்ததை வடக்கு கிள்ளான் காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் எஸ். விஜய ராவ் உறுதிப்படுத்தினார்.

“தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தடயவியல் பிரிவு வழக்கைக் கையாளுகிறது,” என்றும் அவர் சொன்னார்.

Comments