Offline
‘ராமாயணம்’ – ராவணனின் தாயாக ஷோபனா?
Published on 01/30/2025 03:56
News

சென்னை,நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், நடிகை ஷோபனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஷோபனா நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படாதநிலையில், அவரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ராவணனின் தாய் கைகேசியாக ஷோபனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

Comments