Offline
Menu
காணாமல் போன 9 வயது சிறுவனின் உடல் ஜோகூர் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது
Published on 01/30/2025 04:13
News

கோத்தா திங்கி:

கடந்த திங்கள்கிழமை (ஜனவரி 27) கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு கால்வாயில் தவறி விழுந்த தனது செருப்புகளை மீட்டெடுக்க முயன்றபோது, காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒன்பது வயது சிறுவனின் உடல் இன்று காலை ஜோகூர் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த சிறுவன் அப்பகுதியில் உள்ள வடிகாலில் விழுந்த பிறகு பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது என்று கோத்தா திங்கி மாவட்ட காவல்துறை தலைவர் கண்காணிப்பாளர் யூசோப் ஓத்மான் கூறினார்.

இன்று காலை 10.20 மணிக்கு, ஜோகூர் ஆற்றில் மிதந்துகொண்டிருந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் உடலை தேடுதல் மற்றும் மீட்புக் குழு கண்டுபிடித்தது,” என்று அவர் இன்று புதன்கிழமை (ஜனவரி 29) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முழுமையாக உடையணிந்திருந்த பாதிக்கப்பட்டவர் காணாமல் போன சிறுவன் என குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டதாக கண்காணிப்பாளர் யூசோப் மேலும் கூறினார்.

மேலும் சடலம் விசாரணைக்காக கோத்தா திங்கி மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரண அறிக்கை (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

Comments