Offline
சபா வெள்ளம்: 1,026 பேர் வாழ்விடங்களிருந்து வெளியேற்றம்
Published on 01/30/2025 04:15
News

கோலாலம்பூர்:

சரவாக் மாநிலத்தில் நேற்று இரவு முதல் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, இன்று காலை வரை 1,026 பேர் தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சரவாக்கில், கூச்சிங், செரியான், பிந்துலு, மிரி, சிபுரான், டாடாவ், பாவ் மற்றும் சிமுஞ்சான் ஆகியவற்றை உள்ளடக்கிய இடங்களில் 14 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

இதில் செரியானில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 11 மணி நிலவரப்படி, கோத்தா மருடுவில் உள்ள போங்கோன் ஆறு மற்றும் பண்டாவ் ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை வரம்பை மீறி, முறையே 7.14 மீட்டர் மற்றும் 4.93 மீட்டர் உயரத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments