எஸ்ஐஏ’ உலகின் 28வது சிறந்த நிறுவனமாக, 2023 ஃபார்ச்சூன் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 29வது இடத்தில் இருந்த இந்த சிங்கப்பூர் விமான நிறுவனம், இவ்வாண்டு உலகளவில் அதிகம் கவர்ந்த 10 நிறுவனங்களின் பட்டியலில் முன்னேறி, பட்டியலின் முதல் 50 இடங்களில் முடித்த ஒரே சிங்கப்பூர் நிறுவனமாக மாறியுள்ளது.
இந்த பட்டியலில் 3,380 நிர்வாகிகளின் கருத்தின் அடிப்படையில் நிறுவனங்களை புதாக்கம், போட்டித்தன்மை மற்றும் செயல்பாடு போன்ற அடிப்படைகளில் மதிப்பிடப்பட்டன. ஸ்டார்பக்ஸ், அக்செஞ்சர் மற்றும் சாம்சங் போன்ற அமெரிக்க நிறுவனங்களைப் பின்னுக்கு தள்ளி எஸ்ஐஏ முன்னேறியது.
இந்த பட்டியலில் 18வது ஆண்டாக ஆப்பிள் முதலிடத்தை பிடித்த நிலையில், 2வது இடத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் உள்ளது.