Offline
மகா விபத்து: விவிஐபி அட்டை ரத்து, வாகனங்கள் செல்ல தடை
Published on 01/31/2025 04:48
News

பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா விபத்துக்குப் பிறகு, மாநில அரசு கூட்ட நெரிசலைத் தடுக்கும் வகையில் கடுமையான ஐந்து புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலில், 30ஆம் தேதி முதல் விவிஐபிக்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மகா கும்பமேளா பகுதிக்கு அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டு, ஒருவழிப் போக்குவரத்து முறையை அமல்படுத்தியுள்ளது.

பிரயாக்ராஜ் நகருக்கு வரும் வாகனங்கள் மாவட்ட எல்லைகளில் நிறுத்தப்படுவதாகவும், பிப்ரவரி 4 வரை நான்கு சக்கர வாகனங்கள் அனுமதியின்றி நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.

கூட்ட மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், மேலும், ரயில் நிலையங்களில் வசந்த பஞ்சமி நாளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஆபத்தான இடங்களில் 'ஹோல்டிங்' பகுதிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்ட நெரிசலின் காரணங்களை விசாரிக்க ஒரு நீதித் துறை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Comments