சிலாங்கூரின் காஜாங் நகரில் பெற்றோரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக நம்பப்படும் ஏழு வயது சிறுமி நேற்று உயிரிழந்தார்.
காஜாங் காவல்துறை தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறியபடி, சிறுமி மயக்க நிலையில் பெற்றோரால் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, சிவப்பு மண்டல அவசர சிகிச்சையில் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில், உடலில் பழைய மற்றும் புதிய துஷ்பிரயோகம் அறிகுறிகள் காணப்பட்டு, அடிவயிற்றில் ஏற்பட்ட காயங்களால் மரணம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
சிறுமியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு, குற்றவியல் பிரிவு 302 இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.