சீனப் புத்தாண்டு பண்டிகைக்கான பயண வசதியை மேம்படுத்த மலேசியன் ஏர்லைன்ஸ் 102 கூடுதல் விமானங்களை இயக்குகிறது. கோலாலம்பூரிலிருந்து சபா, சரவாக் இடையே 219 வாராந்திர விமானங்கள் தற்போது இயக்கப்படுகின்றன. பயணிகளை ஏற்ற உள்நாட்டில் 190,000க்கும் மேற்பட்ட மக்களை வரவேற்கும் என்றும், மலேசியர்களுக்கு மலிவு விலையில் பயணத்தை ஏற்படுத்த அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குனர் டத்தோ கேப்டன் இஷாம் இஸ்மாயில் தெரிவித்தார்.