Offline
பேராக்கின் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலைய விரிவாக்கத்திற்கு 60 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு.
Published on 02/02/2025 02:16
News

பேராக்கின் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையம் விரிவாக்கத்திற்கு 60 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஈப்போவில் ஒரு அனைத்துலக விமான நிலையம் அமைப்பது முன்னேறியுள்ளதாக பேராக் மந்திரி சரானி கூறினார். விஷயத்தில் மத்திய அரசு முழு ஆதரவை வழங்கும் என்றும், விரிவாக்கம் மூலம் கூடுதலான விமானச் சேவைகளை ஈர்க்க முடியும் என்று அவர் விளக்கினார். தற்போது, ஸ்கூட் விமான நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து தினமும் 3 விமானச் சேவைகளை வழங்குகிறது.

Comments