Offline
மலேசிய சோதனைச் சாவடிகளின் செயல்பாட்டை வேகமாக்கும் புதிய எல்லைக் கட்டுப்பாடு
News
Published on 02/02/2025

ஜோகூர் பாரு: மலேசிய எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளின் செயல்பாட்டை வேகப்படுத்த புதிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது, 1ஆம் தேதி முதல் 114 சோதனைச்சாவடிகளின் இயக்கத்தை நேரடியாகக் கண்காணிக்கும். முதலில் 22 சோதனைச்சாவடிகளில் ஆணையம் பணிகளைத் தொடங்கும், அதில் ஜோகூரின் தஞ்சோங் பலேபாஸ் மற்றும் பாசிர் குடாங் துறைமுகங்களும் உள்ளன. ஆணையத்தின் தலைவராக சுங்கத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றம், அமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்று மலேசிய அரசு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

Comments