Offline
அரசு திட்டங்களில் லஞ்சம்: 6 பேர் கைது – சரவாக் எம்ஏசிசி
Published on 02/07/2025 01:33
News

சரவாக்கில், லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில் ஒரு சிவில் இன்ஜினியர் மற்றும் மூன்று நிறுவன உரிமையாளர்களை உட்பட ஆறு பேரை எம்ஏசிசி கைது செய்தது. 2006 முதல், குத்தகையாளர்களின் அரசாங்க திட்டங்களில் 10% கமிஷன் பெற்று லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். இதில், MACC 450,000 ரிங்கிட் ரொக்கம், நகைகள் மற்றும் புரோட்டான் X70 வாகனத்தை பறிமுதல் செய்துள்ளது. இந்த வழக்கு 2009 எம்ஏசிசி சட்டம் பிரிவு 17(ஏ)க்கு கீழ் விசாரிக்கப்படுகிறது.

Comments