கோலாலம்பூர்:
பள்ளி மாணவர்கள் தப்பு செய்தால், அவர்களை பிரம்பால் அடிக்கும் உரிமை தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார். 1959 ஆம் ஆண்டின் கல்வி விதிமுறைகள் மற்றும் 2003 சுற்றறிக்கைகளின்படி, மாணவர்களுக்கு பிரம்படி உட்பட உடல் தண்டனைகள் பெற்றோர்கள் அல்லது பிற பொதுமக்களால் வழங்கப்படக்கூடாது. மேலும், பிரம்பால் அடிக்கக் கூடாத மாணவிகள் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு பிரம்பால் தண்டனை மாணவர்களின் செயல்களுக்கு அவர்களை நெறிப்படுத்தும் வகையில் வழங்கப்பட வேண்டும், வலியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.