அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து செஸ்னா 208பி கிரான்ட் காராவன் சிறிய ரக விமானம் 10 பேருடன் புறப்பட்டு, 39 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மாயமானது. விமானத்தை கண்டுபிடிக்க பாதுகாப்பு துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக தேடலில் தாமதம் ஏற்படுகிறது. காணாமல் போன விமானத்தில் 9 பயணிகள் மற்றும் 1 விமானி பயணம் செய்தனர்.