2030ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரே நேரப் பள்ளி முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார். சில பள்ளிகளில் அதிக மாணவர்களால் இதை நடைமுறைப்படுத்துவது சிரமம் ஆகிறது. இதனை சாதிக்க, பள்ளிகளின் கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட வேண்டும். இது 5 ஆண்டுகளில் நிறைவேறுவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது, அதிக மாணவர்களுள்ள பள்ளிகளில் காலை மற்றும் மாலை நேரங்களாக இரண்டு நேரக் கல்வி முறைகள் இயங்குகின்றன. பெற்றோர் ஒரே நேரப் பள்ளி முறைக்கு வலியுறுத்தி வரும் நிலையில், இது சாதிக்க பல்வேறு மாற்றங்கள் மற்றும் வசதிகள் தேவை என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பொதுச்சேவை இலாகா துணைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அனிசி இப்ராஹிம் மற்றும் தலைமைக் கல்வி இயக்குநர் அஸ்மான் அட்னான் ஆகியோர் கலந்து கொண்டனர்.