பொதுவாக சாலையில் உள்ள பள்ளத்தால், வாகனங்கள் கவிழ்ந்தால் அரசு மீது குற்றம்சாட்டப்படுவது வழக்கம். சாலை பராமரிப்பு இல்லாத காரணத்தினால்தான் வாகனம் கவிழந்ததாக குற்றம்சாட்டுவார்கள். ஆனால், பீகார் மாநிலத்தில் சாலையில் கவிழ்ந்த காரின் உரிமையாளர், அரசை அவமதிப்பதற்கான சதி எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பீகார் மாநிலத்தின் பாட்னாவில், ஐந்து பேருடன் சென்ற சொகுசு கார், மழை வெள்ளம் குளம் போல் தேங்கி நின்ற சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் காரில் இருந்த ஐந்து பேரும் காயமின்றி உயிர் தப்பினர். காரை ஓட்டு வந்தவர் பெண். இவர்தான் அரசை அவமதிப்பதற்கான சதி எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் “நாங்கள் எல்லோரையும் தொடர்பு கொண்டோம். டிம் உடன் பேசினோம். அவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசை அவமதிப்பதற்காக சதி செய்யப்பட்டதுதான் இந்த பள்ளம் எனக் கூறினார்” எனத் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் குழியை தோண்டி, 20 நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டனர். தற்போது மழைக்காலம். ஐந்து பேர் காரில் இருந்தோம். யாராவது ஒருவர் உயிரிழந்திருந்தால், யார் பொறுப்பு?. அங்கு பேரி கார்டு கிடையாது. எங்கள் கார் விழுந்த அதேநேரத்தில், பைக் ஒன்றும் விழுந்தது. ஒவ்வொரு நாளும் இந்த குழியில் தினமும் யாராவது ஒருவர் விழுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்” என்றார்.