Offline
Menu
ஆடு வளர்ப்புத் திட்டத்தில் 52.9 மில்லியன் மோசடி: தம்பதி மீது குற்றச்சாட்டு
By Administrator
Published on 09/24/2025 09:00
News

ஈப்போவில்  2016 முதல் 2024 க்கு இடையில் உரிமம் பெறாத வைப்புத்தொகை எடுத்தல், பதிவு செய்யப்படாத முதலீட்டுத் திட்டத்தை ஊக்குவித்தல், 52.89 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான பணமோசடி செய்ததாக  ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு திருமணமான தம்பதியினர் மீது 75 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

வேலையில்லாத 57 வயதான முகமது ரிசா அகமது ஹம்பாட்லி மற்றும் பேராக்கில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக இருக்கும் அவரது மனைவி 55 வயதான வான் ஜிரைசா வான் இஸ்மாயில் ஆகியோர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தனர். குற்றச்சாட்டுகள் நீதிபதிகள் ஐனுல் ஷாஹ்ரின் முகமது மற்றும் ஜீன் ஷர்மிளா ஜேசுதாசன் ஆகியோர் முன் தனித்தனியாக வாசிக்கப்பட்டன.

இந்த வழக்கு மலேசியாவின் நிறுவனங்கள் ஆணையம் (SSM), பேங்க் நெகாரா மலேசியா (BNM), சட்டத்துறை அலுவலகம் (AGC) பணமோசடி குற்றங்கள், குற்றப் பிரிவின் அதிகாரிகள் கூட்டாக வழக்குத் தொடர்ந்தனர்.

BNM இன் குற்றச்சாட்டுகளின் கீழ், இந்த ஜோடி நிதி சேவைகள் சட்டம் 2013 இன் பிரிவு 10 இன் கீழ் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகை பெற்றதாக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. பத்து காஜாவில் Pertubuhan Amal Kita Kinta Perak (PAKKP) நடத்தும் ஆடு வளர்ப்பு முதலீட்டுத் திட்டமான Induk Kambing Baka Shami திட்டத்தின் மூலம் இந்தக் குற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, முகமது ரிசாவுக்கு 150,000 ரிங்கிட் மற்றும் வான் ஜிரைசாவுக்கு 100,000 ரிங்கிட் ஜாமீன் வழங்குமாறு பாதுகாப்பு வழக்கறிஞர் கோரினார். ஆனால் அரசுத் தரப்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை. நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 100,000 ரிங்கிட்  ஜாமீன் வழங்கியது. வழக்கு குறிப்பிடுவதற்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காகவும்  நவம்பர் 4 ஆம் தேதி நிர்ணயித்தது.

Comments