Offline
Menu
இடியுடன் கூடிய மழை, புயல்காற்று : ஸ்ரீ செம்பக்கா PPR குடியிருப்பாளர்கள் பாதிப்பு
By Administrator
Published on 09/24/2025 09:00
News

ஸ்ரீ செம்பக்கா:

நேற்று பிற்பகல் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து லெம்பா பந்தாய் நகரில் உள்ள ஸ்ரீ செம்பக்கா PPR வீட்டுவசதித் திட்டக் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காற்று சூறாவளியைப் போல சக்திவாய்ந்ததாக இருந்தது என்று ஷரிபுதீன் முகமட் ஃபஹ்மி விவரித்தார்.

“நாங்கள் நிலைமையைப் பார்க்க வெளியே சென்றோம்,வெளியில் காற்று மிகப்பயங்கரமாக வீசியது ,” என்று அவர் சம்பவ இடத்தில் பெர்னாமாவிடம் கூறினார்.

மற்றொரு குடியிருப்பாளரான நூர்லியா பஹாருதீன், அந்த பயங்கரமான தருணத்தை நினைத்து இன்னும் மனம் நடுங்குவதாக சொன்னார். மேலும் புயலின் போது கூரை மரக்கட்டைகள் விழுந்து தனது கார் முற்றிலுமாக நொறுங்கியதாக அவர் தெரிவித்தார்.

காப்பீடு செய்யப்படாத தனது சேதமடைந்த காரின் நிதி இழப்பு குறித்து நூர்லியா கவலை தெரிவித்தார். அத்தோடு தனது சுமையைக் குறைக்க அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியை அவர் எதிர்பார்க்கிறார்.

இந்நிலையில் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபத்சில் அந்தப் பகுதியைப் பார்வையிட்டார் மற்றும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM5,000 ஆரம்ப பங்களிப்பை செய்வதாக உறுதியளித்தார். அத்தோடு சேதமடைந்த அனைத்து பள்ளிப் பொருட்களும் உடனடியாக மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Comments