Offline
Menu
வடகிழக்குப் பருவமழைக்கு முன்கூட்டியேத் தயாராகுமாறு, ஸாஹிட் வலியுறுத்தல்!
By Administrator
Published on 09/24/2025 09:00
News

கோலாலம்பூர்:

வடகிழக்குப் பருவமழைக்கு (`எம்.டி.எல்.’ – MTL), முன்கூட்டியேத், தயாராகுமாறு, மலேசியர்கள், குறிப்பாக, சபா, சரவாக் மாநிலங்களில், வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, துணைப் பிரதமர், டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

இது பலத்த காற்று, வீசுவதால், மழை மேகங்கள், வழக்கமாக, இருக்கும், கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து, நகர்கின்றன.

எனவேதான், மத்தியப் பேரிடர், மேலாண்மைக் குழுவின் (Central Disaster Management Committee), தலைவராகவும், இருக்கும், ஸாஹிட், புவி, வெப்பமடைதல், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும், நிச்சயமற்றத் தன்மைகள், துல்லியமான, வெள்ளப் பகுதிகளை, கணிப்பதை, கடினமாக்கியுள்ளன என்று, கூறினார்.

மேலும், இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு, முன்னதாகவே, வெளியேறுவது, உயிர்களையும், சொத்துகளையும், காப்பாற்றும் என்று, அவர், வலியுறுத்தினார்.

இதனிடையே, `நட்மா’ (Nadma), அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், துப்புரவு உபகரணங்களை வழங்குவதால் நிறுவனங்கள் தன்னார்வ குழுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு கணிசமாக மேம்பட்டுள்ளது என்றும்,

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர முடியும் என்றும் கூறினார்

பொதுவாக, ஜனவரியில், முடிவடையும், இந்த வழக்கமான பருவமழை, ஆண்டின் முதல் காலாண்டு வரை நீட்டிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments