கோலாலம்பூர்:
சேதமடைந்த, `மை.காட்’ (MyKad) அட்டைச் சிப்பை, மாற்றுவதற்கு, விதிக்கப்படும், RM10 ரிங்கட் கட்டணத்தை, அரசாங்கம், தள்ளுபடி, செய்தப் பிறகு அதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 40,000-ஆக அதிகரித்துள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் அறிவித்தார்.
இன்று, முதல், அக்டோபர் 7-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த முயற்சி செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் வரவிருக்கும் இலக்கியிடப்பட்ட ரோன்95 எரிபொருள் மானிய விநியோகத்திற்கு முன்னதாக, மை.காட்’ அட்டைச் சிப் சரியாக செயல்படுவதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
எனவேதான், இந்தக் காலக்கட்டத்தில் அரசாங்கம் RM700,000 ரிங்கிட்ற்க்கும் அதிகமான, செலவை, ஏற்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தேசியப் பதிவுத் இலாகா சேவை நேரத்தை நீட்டிக்கத் உள்ளது.
மேலும் பலர் அதே நாளில் புதிய மை கார்டு அட்டை கிடைக்கும் சேவை கிடைப்பதை பாராட்டுவதால் பொதுமக்களின் ஆதரவு உள்ளது என்றும் சைஃபுடின் கூறினார்.