கோலாலம்பூர்:
புள்ளிவிவரத் இலாகாவின் (Department of Statistics) கூற்றின்படி, ஆகஸ்ட் 2025-இல், மலேசியாவின், பணவீக்கம் (inflation), 1.3% உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு 133.2ஆக இருந்த நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) இவ்வாண்டு 134.9-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணிகளாக, காப்பீடு நிதிச் சேவைகள், உணவகங்கள், தங்குமிடம், கல்வி ஆகியவற்றில், ஏற்பட்ட விலையேற்றத்தால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட, 30% இடம்பெற்றுள்ள உணவும் பானங்களும், 2% அதிகரித்துள்ளன.
அதே நேரத்தில், `ரோன்97’ பெட்ரோல் டீசலின் விலைகள் எதிர்மறை வளர்ச்சியில் இருக்கின்றன.
இதனிடையே கிட்டத்தட்ட, 60% பொருட்களின், விலை, அதிகரித்துள்ளது, ஆனாலும், பெரும்பாலானவை, 10%-க்கு கீழ், இருந்தன என்று தலைமைப் புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மாஹிடின் கூறினார்.
ஜோகூர்,
சிலாங்கூர், திரெங்கானு, நெகிரி செம்பிலான் (Johor, Selangor, Terengganu and Negeri Sembilan) ஆகிய, மாநிலங்களில், பணவீக்கம் தேசிய, சராசரிக்கு மேல் பதிவாகியுள்ளது. அதே வேளையில் கிளாந்தான் 0.1% அதிகரித்து, மிக குறைந்த பணவீக்க ஏற்றத்தை பதிவு செய்துள்ளது.