நியூ யார்க்,
பிபிபி அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிராம்ப் தமது மனைவியுடன் ஏறிய மின்சார படிக்கட்டு பழுதடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் திங்கள்கிழமையன்று நிகழ்ந்தது. குறிப்பாக பிபிபி மாநாட்டில் உரையாற்ற இருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிலும் இது பிபிபி ஊழியர்களால் மேற்கொள்ளபட்ட திட்டமிட்ட சதி என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு வேளை இது திட்டமிட்ட சதி என்றால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆனாலும் அவரின் கூற்றை பிபிபி அலுவலகத் தரப்பு மறுத்துள்ளது. அதிலும் அமெரிக்க பேராளர் குழுவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் பின் நோக்கியபடி அந்த மின்சார படிகட்டில் ஏறியதால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் இச்சம்பவத்திற்கு காரணம் என்று அந்த அலுவலக தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.