Offline
Menu
ரஷியாவுக்கு அதிக நிதி.. உக்ரைன் போர் தொடர முக்கிய காரணம் இந்தியா
By Administrator
Published on 09/25/2025 09:00
News

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.

இதில் உக்ரைன் போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ” ரஷிய எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து செய்வதன் மூலம் சீனா மற்றும் இந்தியா தான் நடந்து வரும் போருக்கு முக்கிய நிதியுதவி அளிக்கின்றன.

ஆனால் நியாயமற்ற வகையில், நேட்டோ நாடுகளும் ரஷ்ய எரிசக்தி பொருட்களை அதிகம் துண்டிக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு எதிராகவே போருக்கு நிதியளிக்கிறார்கள்.

ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு ஒப்பந்தம் செய்ய தயாராக இல்லை என்றால், அமெரிக்கா மிகவும் கடுமையான வரிகளை விதிக்க முழுமையாக தயாராக உள்ளது. என்று அவர் கூறினார்.

அந்த வரிகள் பயனுள்ளதாக இருக்க, ஐரோப்பிய நாடுகள், இங்கு கூடியிருக்கும் நீங்கள் அனைவரும், அதே நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எங்களுடன் இணைய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

Comments