கோலாலம்பூர்:
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) துணை அரசு வழக்கறிஞர்,ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
MACC கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது, மேலும் அந்த அதிகாரி செப்டம்பர் 23 அன்று அவரது வீட்டில் தடுத்து வைக்கப்பட்டார் என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ள்ளது.
அவரது வீட்டு வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் என்று நம்பப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
“இந்த விஷயம் மேலும் விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. “அவர்களின் விசாரணையில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்று அது கூறியது.