கோலாலம்பூர்:
2023 முதல் கொலைகள், ஆயுதமேந்திய கொள்ளைகள், பராங் தாக்குதல்கள் மற்றும் தீ வைப்புகள் என குற்றச் செயல்களுக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் Ops Jack Sparrow நடவடிக்கையை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.
செப்டம்பர் 11 அன்று Ops Jack Sparrow இன் கீழ் புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் அவர்களது மாநில குற்றப்புலனாய்வு துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகள் மூலம் பல மாநிலங்களில் குற்றச் செயல்களால் பயமுறுத்திய கும்பலை முடிவுக்கு கொண்டுவந்ததாக காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதில் 19 முதல் 44 வயதுக்குட்பட்ட பதினேழு ஆண்கள் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் பேராக்கில் கைது செய்யப்பட்டனர்.