Offline
Menu
காசா போரை நிறுத்தினால் தான் டிரம்ப்புக்கு நோபல் பரிசு – பிரான்சு அதிபர்
By Administrator
Published on 09/26/2025 09:00
News

நியூயார்க்,நான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன். இந்தியா-சண்டையும் பாகிஸ்தான் என்னால் தான் தீர்க்கப் பட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.நேற்று நடந்த ஐ. நா.சபை கூட்டத்திலும் அவர் இதே கருத்தை வலியுறுத்தினார். இதனை இந்தியா நிராகரித்து உள்ளது.

இந்த நிலையில் 7 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் தனது ஆசையை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது:-காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும். இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்யக்கூடிய நபராக டிரம்ப் இருக்கிறார். காசாவில் இஸ்ரேல் அரசு தனது ராணுவ நடவடிக்கை நிறுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. காசா மோதலை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்குவதில்லை. நாங்கள் ஒரு போதும் செயலற்றவர்களாக இருக்க மாட்டோம். எப்போதும் பிரான்சின் நலன்களை பாதுகாப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments