Offline
Menu
H-1B விசா கணவரா? கிரீன் கார்டு நண்பரா?: வைரலான இந்திய பெண்ணின் பதிவு
By Administrator
Published on 09/26/2025 09:00
News

வாஷிங்டன்:அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

இந்நிலையில், H-1B விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு Green Card வைத்திருக்கும் நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண், தனது போஸ்டில் விசா தொடர்பான மன அழுத்தத்தையும், எதிர்கால அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கேள்வி சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்கக் கனவுடன் வாழும் இந்தியர்கள் மத்தியில் இது பொது விவாதமாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

விசா கட்டண உயர்வு போன்ற சமீபத்திய சம்பவங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவே இது என பலர் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் பலர், விசா மற்றும் கிரீன் கார்டு தொடர்பான பிரச்சனைகளால் பாதிப்பு அடைகிறார்கள் என்பதையும் இப்பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Comments