Offline
Menu
அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்; முதல்-மந்திரி உத்தரவு
By Administrator
Published on 09/26/2025 09:00
News

புவனேஸ்வர்,ஒடிசாவில் வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே மாத சம்பளம் வழங்குமாறு ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக மாத இறுதியில் சம்பளம் வழங்கப்படும். இந்தநிலையில், துர்கா பூஜை விடுமுறைக்காக செப்டம்பர் 27 முதல் அரசு அலுவலகங்கள் மூடப்படவுள்ளது. எனவே, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பண்டிகைக்காக தேவையானவற்றை வாங்க உதவும் வகையில் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே அதாவது செப்டம்பர் 26ல் மாத ஊதியத்தை வழங்க அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில், நாடு தழுவிய சேமிப்பு விழாவில் பங்கேற்க ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி சரண் மாஜி தெரிவித்தார்.

Comments