புத்ராஜெயா:
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் BUDI MADANI முயற்சி பற்றிய துல்லியமான தகவல்களை எண்ணெய் நிறுவனங்கள் பரப்புவதை உறுதி செய்வதற்காக, தகவல் தொடர்பு அமைச்சகம் நிதி அமைச்சகம் (MOF) மற்றும் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) உடன் இணைந்து செயல்படுகிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்க உள்ள மானியத் திட்டத்தின் போது பொதுமக்கள் சரிபார்க்கப்பட்ட விவரங்களை எளிதாக அணுகுவதற்கான இந்த ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறை மிக முக்கியமானதாகும். “டிக்டோக்கர்ஸ், வலைத்தளங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் துல்லியமான தகவல்களைத் தேடும் அனைவரையும் MOF நடத்தும் விளக்க அமர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்,” என்று ஃபாஹ்மி குறிப்பிட்டார்.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக மக்கள் மனதில் எழும் சந்தேகங்களைத் தீர்க்க அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தகவல் துறை மற்றும் சமூக தொடர்புத் துறை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு MOF தயாரித்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) குறித்து விரிவாகப் பயிற்சி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்திடம் (MCMC) அனைத்து தேசிய தகவல் பரவல் மைய மேலாளர்களும் இந்த கேள்வி–பதில்களை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.