கோலாலம்பூர்:
தேசிய போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சி, AADK நடத்திய, நாடு தழுவிய மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையின் போது கெடா மாநிலம், Alor Setarஇல் அதிக எண்ணிக்கையிலான, போதைப்பொருள், தொடர்பான, கைதுகள், பதிவு, செய்யப்பட்டுள்ளன.
அதாவது, கெடாவில், 263 பேரும், அதனை தொடர்ந்து, ஜோகூரில், 151 பேரும், பேராக்கில், 139 பேரும், தடுத்து, வைக்கப்பட்டனர் என்று, நடவடிக்கை துணை இயக்குநர், ஸைனுடின் அப்துல்லா கூறினார்.
ஒட்டுமொத்தமாக, 19 முதல் 61 வயதுக்குட்பட்ட, 1,411 சந்தேக நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது குறிப்பாக methamphetamine பயன்படுத்தியது சோதனையில், கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே, கெடாவில், 178 பேர், புதிய போதை பித்தர்களாக, அடையாளம், காணப்பட்டனர்.
இதனால், இவ்வாண்டின் மொத்தக் கைது எண்ணிக்கை 3,189-ஆக, உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் இளைஞர்கள், ஆன்லைன் வாயிலாக போதைப்பொருள் வாங்குவதை கண்டறிவது கடினமாகியுள்ளது என்றும், அதிகாரிகள், எச்சரித்துள்ளனர்.
மேலும், போதைப் பொருள் கலாச்சாரத்தை கையாள்வதற்கு பெற்றோர்களும் சமூகத்தினரும் விழிப்புடன், இருக்குமாறு, வலியுறுத்தப்பட்டுள்ளது.