Offline
Menu
கோலாலம்பூர்: தங்கம், கிரிப்டோ மற்றும் சொத்துகளை அறிவிக்கத் தவறிய காவல்துறை அதிகாரி மீதுக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது!
By Administrator
Published on 09/26/2025 09:00
News

கோலாலம்பூர், காவல்துறைத் தலைமையகத்தில், முன்னாள் `டி7’ (D7) அதிகாரியாக, இருந்த, துணைச் கண்காணிப்பாளர், முகமட் ஷாஹ்ரில் அபு பக்கர், இன்று, அமர்வு நீதிமன்றத்தில், 716.8 கிராம் டிஜிட்டல் தங்கம், RM80,000 ரிங்கிட் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி, பிற, முதலீடுகள், உட்பட, சொத்துகளை, அறிவிக்கத், தவறியதற்காக, அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இருப்பினும் தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து Shahril விசாரணை கோறினார்

இந்தக் குற்றச்சாட்டுகள், எம்.ஏ.சி.சி.’ (*MACC*) சட்டம், *பிரிவு 36-இன் கீழ், அவரது, தனிப்பட்ட, குடும்பக், கணக்குகளில் உள்ள நிதிகள், வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றின், மூலத்தை, விளக்கத் தவறியதாகக் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த, குற்றங்கள், கடந்த, ஜூன் 28-ஆம் தேதி, புத்ராஜெயாவில், உள்ள, எம்.ஏ.சி.சி.’ தலைமையகத்தில், நடந்ததாகவும், கூறப்பட்டது.

இதனிடையே நீதிபதி, ரோஸ்லி அகமட் (Rosli Ahmad), அவருக்கு, RM15,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதித்தார். அத்துடன், மாதம் தோறும் MACC அலுவலகத்தில் தகவல் தெரிவிப்பது, அவரது கடவுச் சீட்டை ஒப்படைத்தல் போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே தான் இந்த வழக்கின் மறு செவிமடுப்பு அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.

Comments