கோலாலம்பூர்:
பெக்கான் கோஷனில் இன்று பூட்டப்பட்டிருந்த டொயோட்டா வியோஸ் காருக்குள் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தைத் திறக்க உதவி கோரி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவிற்கு மாலை 5.01 மணிக்கு காவல்துறையினரிடமிருந்து அழைப்பு வந்தது.
சிறப்பு உபகரணங்கள் மூலம் கார் கதவை உடைத்து, பாதிக்கப்பட்ட 56 வயது ஆடவரை வெளியே எடுத்த பின்னர் சுகாதார அமைச்சகத்தின் மருத்துவர் குழுவால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று, கோத்தா மருடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் டெப்லி மாமோய் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மேலும் அவர் சொன்னார் .