கோலாலம்பூர்:
பருவமழைக் கால மாற்றம், செப்டம்பர் 30-ஆம் தேதி முதல், தொடங்கி, நவம்பர் வரை, தொடர்வதால் மலேசியர்கள் மிகவும், தீவிரமான வானிலை நிகழ்வுகளுக்குத், தயாராகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு, பருவமழை காலத்திலிருந்து மாறுவது நாடு முழுவதும், பல திசைகளில் காற்றழுத்த தாழ்வான நிலை ஏற்படும் என்று வானிலை ஆய்வுத் மையம் (`மெட்மலேசியா’ – METMalaysia), கூறியுள்ளது.
இந்தக், கால மாற்றம், பொதுவாக, பிற்பகலிலும், மாலையிலும், இடி, மின்னல், கனமழை மற்றும் பலத்தக், காற்றுக்கு, வழிவகுக்கும், என்று, எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியத் தீபகற்பத்தின் (peninsula) மேற்கு, உட்பகுதிகள், மேற்கு சபா (western Sabah) மற்றும் சரவாக் (Sarawak) ஆகிய, பகுதிகள், நிலையற்ற, வானிலையால், மோசமாகப், பாதிக்கப்பட, வாய்ப்புள்ளது.
எனவே தான், இக்காலக்கட்டத்தில், திடீர் வெள்ளம், மரங்கள் விழுதல், திடீர் நீர் எழுச்சி மற்றும் உறுதியற்ற உடையக்கூடிய கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் மெட்மலேசியா’ (*METMalaysia*) எச்சரித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் மெட் மலேசியாவின் இணையதளம், myCuaca மொபைல் செயலி, சமூக, ஊடகங்களில் வெளியிடப்படும், வானிலை அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு, விழிப்புடன், இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சமீபத்திய, தகவல்களுக்கு மெட் மலேசியாவின் 1-300-22-1638 என்ற, ஹாட்லைனில், (hotline) தொடர்பு, கொள்ளவும், பொதுமக்கள், ஊக்குவிக்கப்படுகிறார்கள்.