Offline
Menu
விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசல்: உயிர்ப்பலி 31 ஆக உயர்ந்த சோகம்
By Administrator
Published on 09/29/2025 09:02
News

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் கரூரில் மக்களை சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக, முதற்கட்ட தகவல்

வெளியானது. பின்னர், பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. 3

குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தெரிவித்திருந்தார்.

இந்த நிலயைில் உயிர்ப்பலி 29 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை . மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அவர்களின் உயிர் பிரிந்தது. சடலமாக கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உயிர்ப்பலி 31 ஆக அதிகரித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comments