Offline
Menu
10 வயது சிறுவன் போல் நடித்த இலங்கை நபர் – மலேசியப் பாஸ்போர்ட் மோசடி முயற்சியில் கைது
By Administrator
Published on 10/02/2025 09:00
News

கோலாலம்பூர்:

மலேசிய அனைத்துலக கடப்பிதழை பெறுவற்காக 10 வயது சிறுவன் போல் நடித்த இலங்கை பிரஜை ஒருவர் வசமாக மாட்டிக்கொண்டார். இன்று காலை புடு சென்ட்ரல் யுடிசி மையத்தில் பதிவு விண்ணப்பம் மேற்கொண்டபோது அந்த நபரின் மீது குடிநுழைவுத்துறைக்கு சந்தேகம் ஏற்பட அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் பிறப்பு பத்திரத்தில் கூறப்பட்ட வயதை காட்டிலும், அந்த நபர் நேரில் இன்னும் அதிக வயதுடையவராக இருப்பது சோதனையில் தெரிய வந்தது. சந்தேக நபர் தனது தாயார் என கூறிக்கொண்ட பெண் ஒருவருடன் அந்த அலுவலகத்திற்கு வந்ததாக கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச குடிநுழைவுத்துறை இயக்குனர் வான் முகமட் சவ்ஃபி தெரிவித்தார்.

பரிசோதனை செய்வதற்காக அதிகாரிகள் அவரிடம் அடிப்படை மலாய் மொழியில் பேசினர். ஆனால் அந்த நபருக்கு புரியவில்லை. மேலும் அவர் கைரேகை சோதனையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் அந்த நபர் 10 வயது சிறுவன் போல் நடித்ததும், அந்த பெண் தமது சொந்த மகனின் பிறப்பு பத்திரத்தை இதற்கு பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவ்விருவரும் 1966 கடப்பிதழ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினர்.

Comments