கோலாலம்பூர்:
மலேசியாவின் 123 முக்கிய நுழைவு இடங்களில் மொத்தம் 635 தானியங்கி வாயில்கள் (Autogates) அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் நிறுவப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் தத்துக் ஸ்ரீ சய்ஃபுத்தீன் நசுடின் இஸ்மாயில் அறிவித்துள்ளார். இத்திட்டம் மலேசிய எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (MCBA) மேற்பார்வையில் நடைபெறும்.
அவரின் கூற்றுப்படி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் குடிநுழைவு கவுண்டர்களில் நேரடி தொடர்புகளை குறைத்து, செயல்முறைகளை வேகமாக்கவும், ஒழுங்கு மற்றும் நேர்மைக்கான சவால்களை சமாளிக்கவும் முடியும்.
மேலும் “எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், கடத்தல் செயல்களை கட்டுப்படுத்தவும், அகதிகள் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்கவும் இந்நடவடிக்கை முக்கியமான படியாகும்,” என்று சைஃபுத்தீன் தெரிவித்துள்ளார்.