இரு வாரங்களுக்கு முன் நாய் ஒன்றை அடித்து மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட இளைஞனுக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 20,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
அதே சமயம் 23 வயதான எம்.டெனிஸ்குமார் என்ற அந்த இளைஞன் அபராத தொகையை செலுத்தத் தவறினால் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என மாஜிஸ்திரேட் அனீஸ் ஹானானி உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டின்படி, வாகனம் பழுது பார்க்கும் வேவை செய்து வரும் டெனிஸ்குமார், இரும்பு கம்பியை கொண்டு நாய் ஒன்றை சாகும் வரை அடித்ததாக கூறப்பட்டுள்ளது.
அவர் இந்த குற்றத்தை இம்மாதம் 18ஆம் தேதி இரவு 10 மணியில் இருந்து மறு நாள் காலை 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் லெபோ கிளேடேங் உத்தாரா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புரிந்ததாகவும் குற்றச்சாட்டில் சொல்லப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அவர் மீது 2015 விலங்கு நலன் சட்டம் பிரிவு 29 (1)(A) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையில் அஸிமா அப்துல் கோஹார் ஆஜரான நிலையில் குற்றம் சாட்டபட்டவரை வழக்கறிஞர் பிரதிநிதிக்கவில்லை.