புத்ரா ஜெயா,
கடந்த ஆண்டு வீட்டு பணிப் பெண்ணை கற்பழித்த குற்றசாட்டு தொடர்பில் துரோனோ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுல் யோங் சூவிற்கு இங்குள்ள கூட்டரசு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை, 2 பிரம்படிகள் விதித்து தீர்ப்பளித்தது.
தேசிய தலைமை நீதிபதி டத்தோஸ்ரீ வான் அகமட் ஃபாரிட் தலைமையிலான மூவர் கொண நீதிபதி குழு இந்த தீர்ப்பை வழங்கியது.
குறிப்பாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் தண்டனைகளையும் ரத்து செய்யக்கோரி 55 வயதான பவுல் செய்திருந்த இறுதி மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி குழு இந்த தண்டனைகளை நிலை நிறுத்தியது.
தீர்ப்பு வழங்கப்பட்டதும் குற்றவாளி கூண்டில் இருந்த பவுல் சோகமாக காணப்பட்டார்.
அதேபோல் வருத்தத்துடன் காணப்பட்ட அவரின் மனை, பிள்ளைகள் பின்னர் உடனடியாக காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்ட பவுலின் கைகளை பிடித்துக் கொண்டு உடன் சென்றனர்.
இதனிடையே இந்த வழக்கு விசாரணையில் பவுல் தரப்பில் டத்தோ ராஜ்பால் சிங், டத்தோ ஹிஷாம் தே, சலீம் பஷீர் ஆகியோர் வாதாடிய சமயம் டிபிபி தரப்பில் முகமட் அம்ரீல், முகமட் ஃபுவார் ஆஜராகினர்.