அடிஸ்அபாபா,எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த தேவாலயத்தில் அதிகாலை நேரத்தில் வழிபாடு நடத்த மக்கள் கூடியிருந்தனர்.
இந்தநிலையில் திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்த மகியாஸ் என்பவர் கூறியதாவது: நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தோம். அப்போது திடீரென தேவாலயத்தில் கட்டுமான பணி நடந்து ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்றார்.